×

மூன்றாவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு

சென்னை: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் மூன்றாவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு, ‘நீலகிரி வரையாடு திட்டம்’ வாயிலாக, ஏப்ரல் 24 முதல் 27ம் தேதி வரை, மாநிலம் முழுவதும் நீலகிரி வரையாடுகள் வாழும் அனைத்து பகுதிகளிலும் மூன்றாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது. 14 வனக்கோட்டங்கள், 43 வனச்சரகங்கள், 124 வனப்பிரிவுகள் மற்றும் 177 கணக்கெடுப்பு தொகுதிகளை உள்ளடக்கி, தமிழ்நாடு முழுவதும் 3,100 கி.மீ.,க்கும் அதிகமான பரப்பளவை விரிவுபடுத்துகிறது.

தெற்கே கன்னியாகுமரியில் உள்ள அஷாம்புமொட்டை (கடல் மட்டத்தில் இருந்து 902மீ உயரம்) முதல் வடக்கே கூடலூரில் உள்ள தவளமலை (கடல்மட்டத்தில் இருந்து 986மீ உயரம்) வரை, தமிழ்நாட்டில் இந்த சிற்றினத்தின் முழு பரப்பளவையும் இக்கணக்கெடுப்பு உள்ளடக்கியுள்ளது. பயிற்சி பெற்ற சுமார் 800 களப்பணியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். நீலகிரி வரையாடு திட்டம், அதன் இயற்கை வாழிடப்பகுதி முழுவதும் அந்த இனத்தின் நீடித்த பாதுகாப்பை உறுதி செய்வதற்காக களப்பணி, அறிவியல் கண்காணிப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chennai ,Environment, Climate Change and Forestry ,Government of Tamil Nadu ,
× RELATED விளைச்சல் இருந்தும் விற்பனைக்கு...