வார இறுதி நாளில் அதிரடி தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5,000 எகிறியது

சென்னை: அட்சய திருதியை கடந்த 19ம் தேதி கொண்டாடப்பட்டது. மறுநாள் முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது. 20ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14400க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 22ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 23ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,280க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14100க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12800க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் வார இறுதி நாளான நேற்று தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது நேற்று தங்கம் விலை அதிகரித்ததை காண முடிந்தது. நேற்று தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14200க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,600க்கு விற்பனையானது. இதேபோல நேற்று வெள்ளி விலையும் அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் விற்பனையானது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Related Stories: