×

வலம்புரிச் சங்கின் தெய்வீக மகிமையும் வழிபாட்டு முறைகளும்

 

வலம்புரிச் சங்கு என்பது இந்து சமயத்தில் மிகுந்த தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக கருதப்படும் புனிதப் பொருளாகும். சங்கு
களில் ஆண் சங்கு, பெண் சங்கு என இரு வகைகள் காணப்படுகின்றன. அவற்றில், ஆண் சங்கிலேயே “ஓம்” எனும் பரமநாதம் ஒலிக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
வலம்புரிச் சங்கினால் இறைவனுக்கு பூஜை, அபிஷேகம் செய்வது பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கும் என்று கூறப் படுகிறது. பிரம்மஹத்தி தோஷம் உட்பட பல்வேறு தோஷங்களை நீக்கும் சக்தி இதற்கு உண்டு என பக்தர்கள் நம்புகின்றனர்.

வீட்டில் வலம்புரிச் சங்கு வைக்கும் முறைகள்

வலம்புரி சங்கை வீட்டில் வைத்திருப்பதற்கு சில முக்கியமான விதிமுறைகள் உள்ளன: சங்கினை காலியாக வைக்கக் கூடாது. தரையில் நேரடியாக வைக்கக் கூடாது.பட்டுத் துணி அல்லது ஆசனத்தின் மீது வைத்து பாதுகாக்க வேண்டும்.உடைந்த சங்கினை ஒருபோதும் பயன் படுத்தக்கூடாது.மேலும், மகாலட்சுமிக்கு பிரியமான ஏலக்காய், பச்சைக் கற்பூரம், துளசி, வெற்றிலை, லவங்கம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சங்கிற்குள் வைத்து வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. சங்குகளின் வகைகள் மற்றும் அவற்றின் சிறப்பு.நம்முடைய கலாச்சாரத்தில் சங்கநாதம் மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. சங்குகளில் பல்வேறு வகைகள் உள்ளன:
மணிசங்கு
துவரி சங்கு
பாருத சங்கு
வைபவ சங்கு
துயிலா சங்கு

* இவற்றில் முக்கியமாக தெய்வீகத் தன்மை வாய்ந்த நான்கு சங்குகள்:

வலம்புரி சங்கு
இடம்புரி சங்கு
சலஞ்சலம்
பாஞ்சசன்னியம்
இவற்றில் “பாஞ்சசன்னியம்” என்பது மகாவிஷ்ணுவின் கரத்தில் உள்ள சங்காகும். மற்ற சங்குகள் மகாலட்சுமியின் அம்சங்களாக கருதப்படுகின்றன.

பாற்கடல் கடைந்ததில் கிடைத்த தெய்வீகப் பொருள்

தேவர்கள் மற்றும் அசுரர்கள் இணைந்து நடத்திய பாற்கடல் கடையும்போது கிடைத்த புனிதப் பொருட்களில் ஒன்றாக வலம்புரிச் சங்கு குறிப்பிடப்படுகிறது. மகாலட்சுமியுடன் தோன்றியதனால் இது அவருடைய
அம்சமாகவே கருதப்படுகிறது.
வாய் பகுதியிலிருந்து சுழி வரை வலப்புறமாக சுழன்று இருக்கும் அமைப்பே “வலம்புரி” என அழைக்கப்படுகிறது.
வலம்புரிச் சங்கின் பயன்கள்
வீட்டில் வலம்புரி சங்கு வைத்திருப்பதால் கிடைக்கும் பலன்கள்:
மகாலட்சுமியின் அருள் நிலைபெறும். செல்வவளம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்ப ஒற்றுமை உயரும்.
மன அமைதி கிடைக்கும்.
பூஜை செய்வது எப்படி?

வாழையிலை அல்லது தட்டில் பச்சரிசி / நெல் வைத்து அதன் மேல் சங்கை வைக்க வேண்டும். வடக்கு அல்லது தெற்கு நோக்கி வைக்க வேண்டும்.

* தண்ணீர் நிரப்புதல்:

தினமும் நீரை மாற்ற வேண்டும். துளசி, மல்லிகை, தாமரை இதழ் போன்றவற்றை சேர்க்கலாம்.
இந்த தீர்த்தம் குடிக்கவும், வீட்டில் தெளிக்கவும் பயன்படும்

* அரிசி நிரப்புதல்:

15 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். பழைய அரிசியை பறவைகளுக்கு கொடுக்கலாம் அல்லது கோலம் போட பயன் படுத்தலாம். பூச்சி ஏற்படும் வரை வைக்கக் கூடாது.

* சங்காபிஷேகத்தின் மகிமை

விசேஷ நாட்களில் சங்கில் பன்னீர் கலந்த நீரை நிரப்பி மந்திரங்களுடன் அபிஷேகம் செய்வது சிறப்பு.
வலம்புரி சங்கு என்பது ஒரு சாதாரண பூஜை பொருள் மட்டுமல்ல; அது மகாலட்சுமியின் சன்னிதி எனக் கருதப்படும் புனித சின்னமாகும். இதனை முறையாக பராமரித்து, விதிமுறைகளுடன் வழிபட்டால், வாழ்வில் செல்வம், சாந்தி மற்றும் வளம் பெருகும் என்பது பாரம்பரிய நம்பிக்கை

Tags :
× RELATED நம்மை தூண்டுவது எது?