×

அதிமுக நிர்வாகி மகன் மீது வழக்கு

பேரையூர், ஏப். 25: வாக்களிப்பதை வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் சேடபட்டி அதிமுக நிர்வாகி மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி அதிமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் பிச்சை ராஜன். இவரது சொந்த ஊர் சேடபட்டி அருகே பெரியகட்டளை.

இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் குடும்பத்துடன் வாக்களித்த போது இவரது மகன் நவீன் (35) வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் எந்த சின்னத்தில் வாக்களித்துள்ளோம் என்பதனை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது செல்போன் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். இது தகவலறிந்த விஏஓ சசிகலா தேர்தல் விதிமுறை மீறல் சம்பந்தமாக நவீன் மீது சேடபட்டி காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : AIADMK ,Peraiyur ,Setapatti AIADMK ,Pichai Rajan ,Setapatti AIADMK union ,Peraiyur taluka, Madurai district ,
× RELATED பள்ளிபாளையம் நகராட்சி ஆபீஸ் முன் ஒரு...