- பாஜக
- முதல் அமைச்சர்
- சாம்ராட் சௌத்ரி
- பீகார் சட்டமன்றம்
- பாட்னா
- ஜனதா தளம் ஐக்கிய
- நிதீஷ் குமார்
- பீகார்
- ராஜ்ய சபா
- துணை
- முதல் அமைச்சர்…
பாட்னா: பீகார் மாநிலத்தின் நீண்டகால முதல்வராக பதவி வகித்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாஜவைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். நிதிஷ்குமார் பதவி விலகியதைத் தொடர்ந்து நடந்த இந்த ஆட்சி மாற்றத்தின் முக்கிய கட்டமாக, சட்ட பேரவையில் தனது அரசுக்கு ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவானது.
இந்நிலையில், 243 உறுப்பினர்களைக்கொண்ட பீகார் சட்டபேரவையில், நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசு எளிதாக வெற்றி பெற்றது. பேரவையில் தேஜ கூட்டணிக்கு 202 எம்எல்ஏக்கள் உள்ளனர். கடந்த நவம்பரில் நடந்த பேரவை தேர்தலில் பாஜ தலைமையிலான 5 கட்சி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ராஷ்டிரிய ஜனதா தள தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு 41 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
