×

உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.25,000, பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை: திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

 

கோவை, ஏப். 22: கோவை சிவானந்தகாலனி பகுதியில் திமுக தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி தனது பிரசாரத்தை நேற்று நிறைவு செய்தார். இந்த பிரசார கூட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி இயக்க தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், தெற்கு தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில்பாலாஜி பேசியதாவது: தமிழக முதலமைச்சரின் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

Tags : DMK ,Senthilbalaji ,Coimbatore ,South ,Coimbatore Sivananda Colony ,Secular Progressive Alliance Party ,
× RELATED ஆபத்தான நிலையில் பஸ் நிலைய மேற்கூரை