×

சட்டமன்ற தேர்தல் எதிரொலி சென்னையில் இருந்து 1.88 லட்சம் பேர் பயணம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பரேவை தேர்தல் நடைபெறுவதையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் சேர்த்து 10,663 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு, மாதாவரம் போன்ற போக்குவரத்து வழித்தடங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன் தினம், வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1339 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஒட்டு மொத்தமாக 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,88,705 பயணிகள் பயணம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் தினசரி பேருந்துகளுடன் 5,662 சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உட்பட பிரதான 4 பேருந்து முனையங்களில் இருந்து இயக்கப்பட்டன. இதில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டதால் ஜி.எஸ்.டி சாலை போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டன. போக்குவரத்து போலீசார் உதவியுடன் சரிசெய்யப்பட்டு வாகன ஓட்டிகள் இடையூறுயின்றி கடந்து சென்றனர். மேலும், பேருந்துகளில் மட்டுமல்லாது பொதுமக்கள் தங்களுடைய கார்,பைக் போன்ற வாகனங்களில் பலர் சொந்த ஊர்களுக்கு படை எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Tamil Nadu assembly elections ,Klampakkam ,Kalaignar Centenary Bus Terminal ,Koyambedu ,Madhavaram… ,
× RELATED 18 தொகுதியிலும் அன்புமணிக்கு கொடுக்கிற...