×

ஓசூர் அருகே அதிகாலையில் சாலை விபத்து: ஆம்னி பேருந்து மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்தில் பலி

 

ஓசூர்: ஓசூர் அருகே அதிகாலை நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தமிழ்நாட்டின் தற்போதைய 16வது சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகதின் 17வது சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய பெங்களூருவில் இருந்து தருமபுரி நோக்கி ஒரு காரில் 4 பேர் வந்துள்ளனர். அப்போது சாணமாவு வனப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது கார் மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதால் அதில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Hosur ,16th Legislative Assembly of Tamil Nadu ,17th ,Legislative Assembly of Tamil ,Nadu ,
× RELATED அடுத்தடுத்து வெடித்த 2 சிலிண்டர்கள்.....