×

பண்ருட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா அமைக்கும் பணி ஏற்பாடுகள் தீவிரம்

பண்ருட்டி, ஏப். 22: பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 309 வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு மற்றும் வெளிப்படை தன்மையை உறுதிசெய்வதற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் வெப் காஸ்டிங் வசதிகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் மட்டும் 700க்கும் மேற்பட்ட வெப் கேமராக்கள் வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க நிறுவப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையங்களில் உள்ள அனைத்து கேமராக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, தேர்தல் அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, பதற்றமான மற்றும் மிகவும் முக்கியமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் முறைகேடுகளைத் தவிர்க்க, வாக்குச் சாவடியின் உள்ளேயும் வெளியேயும் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. சில இடங்களில் அடுக்கு பாதுகாப்பு முறையைப் பின்பற்றி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

Tags : Panruti ,
× RELATED ரத்த காயங்களுடன் லாரி டிரைவர் குளத்தில் சடலமாக மீட்பு