×

காட்டுமன்னார்கோவிலில் குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி காட்டுமன்னார்கோவில்,

ஏப். 30: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோயில் எதிரே பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தில் அருகில் இருப்பவர்கள் நேற்று காலை குளிக்க செல்லும்போது சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்ததை பார்த்துள்ளனர். இதையடுத்து காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா, காவல் உதவி ஆய்வாளர் சையத் அப்சல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் மகன் முருகேசன் (80) என்பது தெரியவந்தது. மேலும் இவர் குளிக்க இறங்கும்போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் முதியவர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மகள் செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kattumannarkovil Kattumannarkovil ,Veera ,Narayana Perumal temple ,Kattumannarkovil, Cuddalore district ,
× RELATED ரத்த காயங்களுடன் லாரி டிரைவர் குளத்தில் சடலமாக மீட்பு