- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வேல
- தமிழ் மத்திய புலனாய்வு
- ஆந்திர
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
வேலூர், ஏப்.22: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தை ஒட்டிய ஆந்திர மாநில பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை தமிழக மத்திய நுண்ணறிவுப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு நேற்று 21ம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான நாளை 23ம் தேதி வரையும், மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தன்றும் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தை ஒட்டிய ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களில் தமிழக எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவிற்குள் உள்ள மதுபான கடைகளையும், பார்களையும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை மதிழக மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல்துறை துணைத் தலைவர் மூர்த்தி உத்தரவுப்படி, வேலூர் மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் அடங்கிய குழுவினர் மாநில எல்லை பகுதியை ஒட்டியுள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள 5 கி.மீ சுற்றளவில் உள்ள மற்றும் ஆந்திர மாநில மதுபான கடைகள் மற்றும் தமிழக டாஸ்மாக் கடைகளை தணிக்கை செய்து மேலும் அனைத்து வகையான பார்கள் அடைக்கப்பட்டுள்ளதா என்பதை தணிக்கை செய்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
