×

தேர்தல் விதிமுறைகளை மீறி தவெக ஆன்லைன் அரசியல் அறிவிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை அண்ணா நகர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் முகமது பிலால் பேட்ரிக் மற்றும் பெரம்பூர் தொகுதி வாக்காளர் தேவசகாயம் நேற்று சந்தித்து புகார் அளித்தனர். புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: தவெகவின் சமூக ஊடக தளங்களில் ‘பெரிய அளவிலான அரசியல் பிரசாரம்’ என்ற அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதில் அரசியல் சின்னங்கள், காட்சிகள், வாக்காளர்களை பாதிக்கும் வகையிலான செய்தி மற்றும் பிரசார நோக்குடைய உள்ளடக்கம் இடம்பெற்றுள்ளது. இது தேர்தல் விதி மீறலாகும்.

தேர்தல் முடியும் நேரத்துக்கு முன் 48 மணி நேர காலப்பகுதியில் சினிமா, தொலைக்காட்சி அல்லது இதற்கு ஒத்த சாதனங்கள் மூலம் எந்தவொரு தேர்தல் சார்ந்த விஷயமும் பொதுமக்களுக்கு காட்டப்படக்கூடாது. ஆனால் தவெக கட்சி இதை மீறயிருக்கிறது. இது வாக்காளர்களின் மனநிலையை மாற்றுக்கின்றன. விதிமுறைகளை மதிக்கும் மற்ற கட்சிகளுக்கு அநீதி ஏற்படுத்துகின்றன. தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ள சமநிலையை குலைக்கின்றன. எனவே தவெகவின் ஆன்லைன் அறிவிப்பை உடனடியாக நீக்க உத்தரவிடுதல், தவெகவிற்கு காரணம் காண்பிக்க நோட்டீஸ் வழங்குதல், சட்டப்பூர்வ நடவடிக்கை மற்றும் வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

Tags : Thaweka ,Chennai ,Anna Nagar ,Mohammed Bilal Patrick ,Perambur ,Devasakhayam ,Tamil Nadu ,Election Officer ,Archana Patnaik ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்...