×

ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து பைக் பேரணி மூலம் பிரசாரம்

ஆலந்தூர், ஏப்.22: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரகன் நேற்று இறுதிக்கட்ட பிரசாரமாக பைக் பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கு முன்னதாக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் பழவந்தாங்கல் பர்மா காலனி பகுதியில் ஜீப்பில் ஏறி நின்றவுடன் பைக் பேரணி புறப்பட்டது. இவருடன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சுதா பிரசாத், மாநில செயற்குழு உறுப்பினர் அய்யம்பெருமாள் ஆகியோர் உடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த பைக் பேரணி பழவந்தாங்கல் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்றது. பரங்கிமலை சுரங்கப்பாதை அருகே வெளிச்சம் அறக்கட்டளையை சேர்ந்த திருநங்கைகள் தலைவர் மந்த்ரா தலைமையில் வேட்பாளர் தா.மோ.அன்பரசனுக்கு பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

கவுன்சிலர் பிருந்தா  முரளி கிருஷ்ணன் தலைமையின் அங்கு வரவேற்பளிக்கப்பட்டது. இந்த வாக்கு சேகரிப்பில் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.கே.இப்ராகிம், ஆர்.டி.பூபாலன், கவுன்சிலர்கள் தேவிஏசுதாஸ், துர்கா தேவி நடராஜன், பூங்கொடி ஜெகதீஸ்வரன், பிருந்தாஸ்ரீ முரளி கிருஷ்ணன், பாரதிகுமரா, சாலமோன் அணிகளின் சார்பாக ஜெயராம் மார்த்தாண்டன், தரணி வேந்தன், காஜா மொய்தீன் வழக்கறிஞர்கள் கணேசன் ஆனந்த குமரன் பால்அமுதநாதன், மணிகண்டன், அஜித், கேபிள் ராஜா, அபிஷேக், விஜய்கார்த்திக், சேகர், மீன்மோகன், காங்கிரஸ் சார்பாக மாநில செயற்குழு உறுப்பினர் அய்யம்பெருமாள் பகுதி தலைவர்கள் பி.ரமேஷ், ஆதம் பிரகாஷ், மோகனகிருஷ்ணன், சக்திவேல் ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர்கள், ஆவின் ஆனந்த், லயன், காமராஜ், பி.எஸ் ராஜ், செல்வம் ஏசுதாஸ், ஸ்டீபன்தாமஸ், கோ சந்தானம், எஸ்.பாரதி, தேமுதிக பகுதி செயலாளர் நாராயணன் மற்றும் முருகன் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட தலைவர் கிருபாநிதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Alandur ,Anparasan ,Alandur Assembly Constituency ,Mo. Anprakhan ,Mo ,Anbarasan ,Parma Colony ,Pavanthangal ,
× RELATED காரில் கடத்தி வந்த புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்