×

ஆந்திரா மாநிலத்தில் இருந்து 2,500 டன் பச்சரிசி ரயிலில் ஈரோடு வந்தது

ஈரோடு,  பிப். 24:   ஆந்திரா மாநிலத்தில் இருந்து பொதுவிநியோக திட்டத்தில்  விநியோகிப்பதற்காக 2,500 டன் பச்சரிசி நேற்று ரயிலில் ஈரோடு வந்தது. தமிழகத்தில்  பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம்  மக்களுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட  மக்களுக்கு விநியோகிப்பதற்காக ஆந்திரா மாநிலம் விசாகபட்டினம் மாவட்டத்தில்  இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில்  2,500 டன் பச்சரிசி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த அரிசி, 50 கிலோ  மூட்டைகளாக தனி சரக்கு ரயிலில் 42 பெட்டிகளில் ஈரோடு ரயில்வே கூட்ஸ்  செட்டிற்கு நேற்று வந்தடைந்தது. இந்த அரிசி மூட்டைகளை நூற்றுக்கணக்கான  லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டன.

Tags : Andhra Pradesh ,
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...