×

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் மே 4ம்தேதி எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன்பாக 48 மணி நேரம் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும். அதன்படி இன்று முதல் நாளை, நாளை மறுநாள் ஆகிய 3 நாட்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் மதுபானக்கடைகள் மூடப்படும். மறுவாக்குப்பதிவு நடைபெறும் நாட்களிலும் இதே நடைமுறை அமலில் இருக்கும்.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியும் தமிழ்நாட்டில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நாட்களில் மதுபான கடைகள், ஓட்டல்கள், உணவகங்கள், கிளப்புகள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் விற்பனை செய்யவும் வழங்கவும் அனுமதி வழங்கப்படாது. நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் உரிமம் பெற்ற கிளப்புகளுக்கும் இந்த தடை பொருந்தும். அதேபோல், தனிநபர்கள் மதுபான சேமிப்பிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. உரிமம் இல்லாத இடங்களில் மதுபானம் சேமிப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : Election Commission ,Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி...