- சுந்தர் சி.
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- மதுரை
- மத்திய தொகுதி
- அஇஅதிமுக
- வருமானவரித் துறை
- மதுரை மத்திய
சென்னை: வேட்புமனுவில் வருமானங்கள் குறித்த தகவல்களை மறைத்த மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் இயக்குனர் சுந்தர் சி.க்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் வருமான வரித்துறையை அணுகுமாறு மனுதாரருக்கு அனுமதியளித்துள்ளது. மதுரை மத்திய தொகுதி வாக்காளர் ஷகிலா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக கூட்டணியில், புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிடும் இயக்குனர் சுந்தர் சி. தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர் இயக்குனராகவும், பங்குதாரராகவும் உள்ள அவ்னி டெலி மீடியா, அவ்னி மூவீஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்களை மறைத்துள்ளார். இந்த நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் பெற்ற அவர், அதுகுறித்த விவரங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து வருமான வரித்துறையை அணுகுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
