×

அங்கீகாரம், தரம் உயர்த்த தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளாக (6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) தொடங்கப்பட்டு இருந்தால், அந்த பள்ளிகளை தரம் உயர்த்த விண்ணப்பிக்கலாம் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் விதிகள் 2023ல் மேற்கொள்ளப்பட்டுள்ள விதித் திருத்தங்களை பின்பற்றி 13.1.2023க்கு முன்பு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளாக (6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) தொடங்கப்பட்டு இருந்தால், அந்த பள்ளிகளை தரம் உயர்த்துதல் தொடர்பான கருத்துருவை பரிசீலனை செய்து பரிந்துரையுடன் அனுப்ப வசதியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுப்படுகிறது. அதேபோல, 3 ஆண்டுகளுக்கு மேல் அங்கீகாரச் சான்று கோரும் பள்ளிகளுக்கும் அவர்களின் கருத்துருவை பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுப்படுகிறது. மேற்கண்ட விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதை இந்த நடவடிக்கை எடுக்க தனியார் பள்ளிகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், கருத்துரு அனுப்புவோர் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய விண்ணப்பப் படிவ மாதிரிகளையும் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

Tags : Chennai ,Directorate of Private Schools ,Tamil ,Private Schools ,
× RELATED தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி...