×

மகளிர் இடஒதுக்கீடு மசோதா படுதோல்வி; பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் மோடி: காங்கிரஸ் மூத்த தலைவர் காட்டம்

 

புதுடெல்லி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்த நிலையில், ஒன்றிய அரசின் விளக்கக் குறிப்புகளை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, கடந்த 17ம் தேதி மக்களவையில் படுதோல்வி அடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 எம்.பி.,க்களும், எதிராக 230 எம்.பி.,க்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற குறைந்தபட்சம் 352 எம்.பி.,க்களின் ஆதரவு அதாவது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்ட நிலையில், ஒன்றிய பாஜக அரசுக்கு போதிய ஆதரவு இல்லாததால் மசோதா தோல்வி அடைந்தது.

வரும் 2029ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னதாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த, 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து, மக்களவை இடங்களை 543ல் இருந்து 816 ஆக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த முறைகேடான திட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் பிரதிநிதித்துவத்தை சீர்குலைக்க பாஜக முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி மசோதாவை தோற்கடித்தன. மக்களவையில் ஏற்பட்ட இந்த அவமானகரமான தோல்வியை மறைக்க, சேதத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஒன்றிய அரசு வெளியிட்ட விளக்கக் குறிப்புகளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் நேற்று கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘மக்களவையில் மசோதா தோற்ற பிறகு ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள இந்த விளக்கக் குறிப்புகள் முழுக்க முழுக்க ஆதாரமற்றவை மற்றும் மக்களை ஏமாற்றும் செயல். தொகுதி மறுவரையறைக்கும், மகளிர் இடஒதுக்கீட்டிற்கும் உள்ள தேவையற்ற பிணைப்பு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பாஜக அரசு மவுனம் காக்கிறது. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவதில் ஒன்றிய அரசுக்கு துளியும் உண்மைத்தன்மை இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. இதனை வெறும் பொய்யான தகவல்களின் தொகுப்பு. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் அரசியல் லாபம் தேடும் ஒன்றிய பாஜக அரசின் போலித்தனமான செயல்பாடுகளை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்’ என்று அவர் தெரிவித்தார்.

Tags : Modi ,Congress ,Kattam ,New Delhi ,Lok Sabha ,Union government ,
× RELATED ராஜஸ்தானில் ரூ..80,000 கோடியில் புதிதாக...