×

பணி ஓய்வு பெற்ற சாதனை அரசு மருத்துவர்

சென்னை: சென்னயில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இரைப்பை குடலியல் மற்றும் கல்லீரல் சிகிச்சை மையம் தேசிய அளவில் முக்கியத்துவம்வாய்ந்த நிறுவனங்களில் ஒன்று என்பதோடு இந்த துறையில் பல சாதனைகளுக்கும் உரியது. இந்த மையத்தின் தலைவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லீரல், இரைப்பை மற்றும் குடல் அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டவருமான பேராசிரியர் ஜஸ்வந்த் பணி ஓய்வு பெற்றார்.

இந்தியாவில் அரசு துறையில் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மையம் என்பதில் தொடங்கி நாட்டிலேயே அதிகமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மையம் என்பது வரை பல சாதனைகளை செய்திருக்கிறது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை இந்த சாதனைகளில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மருத்துவர் ஜஸ்வந்த்.

குமாரி மாவட்டதில் எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஜஸ்வந்த் அரசு மருத்துவர் என்னும் பணியை மிகுந்த பெருமிதமாக கருதி அர்ப்பணிப்போடு பணியாற்றியவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லீரல், இரைப்பை மற்றும் குடல் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டவர். பல நூறு மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் என்பதோடும். தொடர்ந்து ஆய்வுகளிலும் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர். பழைய சோறு உன்னதமான உணவு என ஆய்வின் வழி நிரூபித்தவர், பல ஆரோக்கிய பலன் அதில் உண்டு என்பதை ஆய்வின்முலம் நிரூபித்ததோடு. வயிறு சம்பந்தமான பல நோய்களுக்கும் நல்ல நிவாரணியாக பழைய சோறு உதவும் என்பதையும் மக்களிடம் கூறினார்.

நாட்டிலே முதலவதாக நூறு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட அரசு மருத்துவமனையனும் சாதனையை ஸ்டான்லி மருத்துவமனை வெற்றிகரமாக எட்டியதற்கும் ஜஸ்வந்த் முக்கிய தூணாக இருந்தார். எளிய மக்களிடம் மிகுந்த அன்போடு சேவையாற்றும் மருத்துவர் ஜஸ்வந்த்க்கு சக மருத்துவர்களும் மாணவர்களும் நெகிழ்ச்சியான பிரிவு உபச்சார விழா நடத்தி வழியனுப்பினர்.

 

 

Tags : Chennai ,Gastroenterology and ,Liver Treatment Centre ,Stanley Government Medical College Hospital ,
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சித்தாந்தம் என...