×

சட்டமன்ற தேர்தலையொட்டி 23ம் தேதி குணா குகை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரிஉள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என அறிவிப்பு!!

கொடைக்கானல்: வரும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ம் தேதி அன்று கொடைக்கானல் தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி போன்ற வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளதாலும், பொதுமக்கள் தடையின்றி வாக்களிக்க ஏதுவாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நாளன்று கொடைக்கானல் மலைப்பகுதிக்குச் சுற்றுலா வரத் திட்டமிட்டுள்ளவர்கள் ஏமாற்றமடையும் சூழல் உருவாகியுள்ளது.

அதேபோல் இயற்கை எழில் கொஞ்சும் பேரிஜம் ஏரிப் பகுதிக்கும் அன்றைய தினம் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடங்கள் அனைத்தும் 23-ம் தேதி காலை முதல் மாலை வரை முழுமையாக மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று மலைக்கிராம மக்கள் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Guna Cave ,Pine Woods ,Barijam Lake ,Assembly Election ,Kodaikanal ,Forest Department ,Kodaikanal Pillar Rock ,Pine Trees ,Moyer Square ,Berizam Lake ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்