×

ஆற்றுப்படுகையில் குப்பை அகற்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

வால்பாறை : வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்று படுகையில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் குப்பைகளை நகராட்சி ஆணையாளர் குமரன் தலைமையில் நேற்று அகற்றும் பணிகள் நடைபெற்றன. இதனுடன் இணைந்து பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தப்பட்டது.

அப்போது ஆணையாளர் கூறுகையில், ‘‘மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை வளங்களில் ஒன்றான வால்பாறை ஆறுகள் 365 நாட்களும் நீர்வரத்து கொண்டவை என்பது இயற்கையின் பெரும் வரம்.

இவ்வாறான நீர்வழிகள் உள்ளூர் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளன. ஆறுகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். நகரில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் குப்பைகள் கொட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வீடுகளில் உருவாகும் கழிவுகளை தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்றார். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் நகராட்சி தூய்மை பணி அலுவலர் செந்தில் உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆற்றுப்படுகையில் இருந்த குப்பைகளை அகற்றினர்.

Tags : Valparai ,Valparai Banana Orchard ,Municipal Commissioner ,Kumaran ,Commissioner ,
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சித்தாந்தம் என...