×

சென்னை துறைமுக ஆணைய தலைமை கண்காணி்ப்பு அதிகாரியாக அனுக்கிரஹா பொறுப்பேற்பு

 

சென்னை: துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை துறைமுக ஆணையத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட அனுக்கிரஹா இன்று பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன்பு மருத்துவதுறையில் இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் மத்திய பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.

சமூக முன்னெடுப்பு, கல்வி, டிஜிட்டல் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி நிர்வாக தலைமை பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெயரை பெற்றுள்ளார். இவர் ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இன்று பொறுப்பேற்ற அவருக்கு அதிகாரிகள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Anugraha ,Chennai Port Authority ,Chennai ,Ministry of Ports, Shipping and Waterways ,
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சித்தாந்தம் என...