×

பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு சாத்தனூர் அணை கால்வாயில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்

தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணை. பொன்விழா கண்ட இந்த அணை 119 உயரம் கொண்டது.

சாத்தனூர் அணை முழு கொள்ளளவு எட்டியதால் விவசாய பாசனத்திற்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததனால் தென்பெண்ணை ஆறு வலது புறம், இடதுபுறம் திருக்கோவிலூர் பழைய ஆழக்கட்டு வழியாக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் சாத்தனூர் அணை 89.65அடியாக நீர்மட்டம் குறைந்துள்ளது. நீர் மின்சாரம் தயாரிக்கக்கடிய வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதனால் 7 எம்எம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சாத்தனூர் அணையில் உள்ள ஆதாம் ஏவாள் பூங்கா, ராக்கெட் பார்க், அறிவியல் பார்க், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், முதலைப்பண்ணை, வீரமங்கை போர் உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து பொழுதைகழித்து சென்றனர்.கடும் வெயிலின் தாக்கத்தால் விவசாய பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரில் இளைஞர்கள் கால்வாயில் குளித்து மகிழ்ந்தனர்.

Tags : Chattanur Dam ,THANDARAMPATTU ,SATANUR DAM ,THIRUVANNAMALAI DISTRICT ,Golden Jubilee ,Tiruvannamalai, ,Viluppuram, ,Kallakurichi ,
× RELATED தமிழ் இனத்தின் துரோகிகளை விரட்டி...