×

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,14,400க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13.600க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1,08,800க்கும் விற்பனையானது. மாலையில் தங்கம் விலை திடீரென உயர்ந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,770க்கும், பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 160க்கும் விற்பனையானது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து சவரன் ரூ.1,14,880க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,360க்கு விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய முன்தினம் விலையிலேயே தங்கம் விற்பனையானது. சென்னையில் இன்று மார்க்கெட் தொடங்கிய நிலையில், ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,300க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனையாகிறது.

Tags : Chennai ,RUPEE ,US DOLLAR ,World Stock Exchange Investment ,
× RELATED விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து;...