×

நியாயமான ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காவிடில், அந்நாட்டின் அனைத்து மின் நிலையங்களையும், பாலங்களையும் அமெரிக்கா தகர்த்து எறியும்: ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரானிடம் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை முன்வைக்க உள்ளோம். அதை ஈரான் ஏற்காவிடில், அந்நாட்டின் அனைத்து மின் நிலையங்களையும், பாலங்களையும் அமெரிக்கா தகர்த்து எறியும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “நேற்று ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்த முடிவு செய்தது — இது நமது போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மீறும் செயலாகும்! அவற்றில் பல பிரெஞ்சு கப்பல் ஒன்றையும், ஐக்கிய இராச்சியத்தின் (UK) சரக்குக் கப்பல் ஒன்றையும் குறிவைத்து நடத்தப்பட்டன.

அது ஒன்றும் அவ்வளவு நல்ல விஷயம் இல்லையல்லவா? எனது பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக நாளை மாலை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குச் செல்கிறார்கள்… நாங்கள் மிகவும் நியாயமான மற்றும் ஒரு தகுந்த ஒப்பந்தத்தை (DEAL) வழங்குகிறோம், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஏனெனில், அவர்கள் அதை ஏற்கவில்லை என்றால், ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் அமெரிக்கா தகர்த்துவிடும்” என தெரிவித்துள்ளார்.

Tags : Iran ,United States ,Trump ,Washington ,President Trump ,Hormuz ,
× RELATED உக்ரைனில் 6 அப்பாவிகள் சுட்டுக் கொலை: குற்றவாளியை சுட்டுக் கொன்ற போலீஸ்