டெல்லி: முதல்முறையாக வந்தே மாதரம் பாடலோடு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெற்றிருக்கிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்றோடு நிறைவு பெற்றிருக்கிறது. இதன்முலம் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
நேற்றைய தினம் மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் மூன்று நாட்கள் கூட்டப்பட்ட சிறப்பு அமர்வு இன்றோடு முடிவுக்கு வந்தது.
கடந்த பிப்ரவரி 28 தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்றதால் குடியரசு தலைவர் உரையோடு கூட்டத்தொடர் தொடங்கியது. ஜனவரி 29 தேதி பொருளாதார ஆய்விற்கு தாக்கல் செய்யப்பட பிப்ரவரி 1 தேதி 2026, 2027 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு பிப்ரவரி 13 தேதியோடு நிறைவுபெற்று இடையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்களை தயார் செய்வதற்காக சிறு இடைவெளி விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 9 தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருடன் இரண்டாம் அமர்வு கூடி ஏப்ரல் 2 தேதி வரை நடைபெற்றது. இடைப்பட்ட காலகட்டத்தில் துணை ரீதியாக மாநில பொறுப்பின் விவாதமும் பட்ஜெட்டும் முழுமையாக நாடாளுமன்றத்தில் ஒப்புதல் என்று தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கமாகவே பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் அமர்வில் நிறைவு பெற கூடிய சூழ்நிலையில், சிறப்பு அமர்வுக்காக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கபட்டது.
ஒத்திவைக்கப்பட்ட அவை நேற்று முன்தினம் கூடியது. சிறப்பு அமர்வில்தான் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு தோல்வியை தழுவி இருக்கிறது. இதனை தொடர்ந்து இன்று இரு அவைகளும் ஒத்தி வைக்கபட்டிருக்கின்றன.
இதன் மூலம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக இதன் மூலம் நிறைவு பெறுகிறது. வழக்கமாக அவை ஒத்திவைக்கபடும்போது தேசிய கீதம் பாடல் பாடப்படும் ஆனால், இன்று முதன்முறையாக தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலோடு இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
