×

தேர்தல் பரப்புரைக்காக ஏப்.20 ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!!

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழ்நாடு வருகிறார். பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரி செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, தனியார் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டதோடு, பெருஞ்சேரி பகுதியில் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 12 மணியளவில் பரப்புரை மேடைக்கு வரும் ராகுல் காந்தி, காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.

இதையடுத்து, பிற்பகல் ஒன்றரை மணி அளவில் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட பாண்டியநல்லூர் பகுதியிலும், மாலை 4 மணியளவில் துறையூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் பைபாஸ் பகுதியிலும் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து இன்று பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பும் அவர், மீண்டும் ஏப்ரல் 20-ஆம் தேதி தமிழகத்திற்கு இரண்டாம் கட்டப் பிரச்சாரத்திற்காக வருகை தர உள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் மேலும் சில முக்கிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Lok Sabha ,Rahul Gandhi ,Tamil Nadu ,Chennai ,Bonneri ,Solinger ,Surayur ,Congress ,Dimuka Alliance ,
× RELATED காவல்துறை அனுமதி அளித்த நிலையிலும்...