×

கிருஷ்ணராயபுரத்தில் வாகன சோதனையில் ரூ.77,000 பறிமுதல்

கிருஷ்ணராயபுரம், ஏப்.18: கிருஷ்ணராயபுரம் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் காரில் ரூ.77,000 பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் 136 தனி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் நிலைய கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் கதவணை அருகில் நிலைய கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்த ஷ்யாம் சுந்தர் (32) என்பவருடைய காரில் ரூ. 77,000 கைப்பற்றப்பட்டது. அவரிடம் உரிய ஆவணம் இல்லை. எனவே கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வித்யாவதியிடம் பணம் பறிமுதல் செய்யபப்ட்டு ஒப்படைக்கப்பட்டது. அப்போது துணை தாசில்தார் ஜெயந்தி உடன் இருந்தார்.

 

Tags : Krishnarayapuram ,Election Flying Squad ,Karur district ,
× RELATED கரூரில் கடும் வெயில்