×

கரூரில் கடும் வெயில்

கரூர், ஏப். 18: கரூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் வழக்கமாக 34.5 மிமீ மழை பெய்த நிலையில் இந்த ஏப்ரல் மாதத்தில் இதுநாள் வரை துளி மழை கூட பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் மாவட்டத்தின் ஆ ண்டு சராசரி மழையளவு 652.20 மிமீட்டராகும். ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை பெயுயம் மழையை சராசரியாக கணக்கிட்டு ஆண்டு சராசரி மழையளவு கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் 34.5 மிமீ மழை பெய்ய வேண்டும்.

இதனடிப்படையில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்ப்பை விட 64.29 மிமீ மழை பெய்து அப்போதையை கோடையை சமாளிக்க உதவியது. இதன் காரணமாக அனைத்து தரப்பினர்களும் நிம்மதியடைந்தனர். ஆனால், 2026ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் துவங்கி 17 நாட்கள் கடந்த நிலையிலும் மழை பெய்யாமல் தினமும் அதிகளவு வெயில் வாட்டி வதக்கி வருகிறது. எல் நினோ அளவுக்கு வெயில் தாக்கி வருவதால் அடுத்த மே மாதத்திலாவது அ திகளவு மழையை கரூர் மாவட்டம் பெற வேண்டடுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Tags : Karur ,
× RELATED கிருஷ்ணராயபுரத்தில் வாகன சோதனையில் ரூ.77,000 பறிமுதல்