×

தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: வைகோ திட்டவட்டம்

விருதுநகர்: விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து நேற்றிரவு வைகோ பேசியதாவது: சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை கொள்கைகளாக வைத்து மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கான கட்டணமில்லாப் பஸ் சேவை, காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போற்கு கூட்டணி வேட்பாளர்கள் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார்கள். கூட்டணி கட்சிகளும் வென்றாலும், திமுக தனிப் பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும். காங்.ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தால் கிராமப்புறத்தில் உள்ள தாய்மார்கள் வீட்டு அடுப்பில் உலை எரிகிறது. தற்போது நிதி தராமல் ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DMK ,Vaiko ,Virudhunagar ,DMDK ,Vijaya Prabhakaran ,Tamil Nadu ,
× RELATED மக்கள் பயன்பெறும் வகையில் போஜராஜ நகர்...