×

சொந்த நாட்டு அதிபரையே பயம்மில்லாமல் எதிர்க்கும் போப் லியோ

யாவுண்டே: கேமரூன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான திருத்தந்தை போப் லியோ, உலக தலைவர்கள் மற்றும் போர்சூழல் குறித்து முன்வைத்துள்ள மிக கடுமையான விமர்சனங்கள் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது .

போர்களுக்காக மில்லியன் கணக்கான டாலர்களை செலவிடும் தலைவர்களைச் சாடியவர் உலகம் சில கொடும்கோலர்களால் சீரழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அழிப்பதற்கு குறைத்த காலங்களே போதும் ஆனால் கட்டியெழுப்ப ஒரு வாழ்நாள் போதாது என்பதை போரை முன்னெடுப்பவர்கள் உணர வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார். குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் போப் லியோ ஆகியோர்களுக்கு இடையே ஏற்கனவே கருத்து மோதல்கள் இருந்த நிலையில் தற்போது போப்பின் பேச்சு டிரம்ப் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையேயான ராணுவ நடவெடிக்கைகளை போப் தொடர்ந்து விமர்சித்துவருகிறார.ஈரானுக்கு எதிராக டிரம்ப் ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என்ற எச்சரித்தற்கு போப் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்,இதற்கு பதிலடியாக போப் அவரது வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்று டிரம்ப் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும் போப் அமெரிக்காவில் பிறந்தவர் என்பதால்தான் அந்த பதவிக்கு தேர்தெடுகப்பட்டார் என்றும் அவர் வெளியுறவு கொள்கையில் பலவீனமானவர் என்று டிரம்ப் விமர்சித்திருந்தார்.

கடந்த ஆண்டு பதவியேற்ற போப் லியோ அமெரிக்காவில் பிறந்த முதல் போப்பவார், இவர் ஏற்கனவே டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கைகளையும் விமர்சித்துள்ளார். டிரம்ப்பின் விமர்சனங்களுக்கு தான் அஞ்சவில்லை, தொடர்ந்து அமைதிக்காக பேசுவேன் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு குறித்து பேசியவர் யாரும் இயேசுவை வைத்து நடத்தும் போரை நியாய படுத்தமுடியாது என்று கூறினார். பைபிளில் உள்ள “உங்கள் கைகள் ரத்தத்தால் நிறைந்திருப்பதால் நீங்கள் செய்யும் பிராத்தனைகளை நான் கேட்கமாட்டேன்” என்ற அதிகாரத்தை மேற்கோள்காட்டி அவர் டிரம்ப் தரப்பிற்கு பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெபசர் போரை ஆதரிக்கும் வகையிலாற்றிய உரையும் போப்பை அதிருப்தியடைய செய்துள்ளது.

தற்போது கேமரூனில் கிளர்ச்சியால் பாதிக்கபட்ட பமெண்டா நகருக்கு சென்ற அவர் இங்குள்ள புனித ஜோசப் பேராலயத்தில் உரையாற்றினார். அமெரிக்க நிலத்தின் வளங்களை சுரண்டுபவர்கள் அதில் கிடைக்கும் லாபத்தை மீண்டும் ஆயுதங்களிலே முதலீடு செய்வதால் அந்த பகுதியில் மரணம் தொடர்கதையாகி வருவதாக குற்றம்சாட்டினார். இது தலைகீழாக மாறிய உலகம், தங்களின் சுயலாபத்திற்காக கடவுளின் பெயரையே சிதைப்பவர்களை நேர்மையான மனசாட்சி கொண்டவர்கள் கண்டிக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

2017 முதல் அங்கு நடக்கும் உள்நாட்டு போரால் சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில் அமைதி என்பது நாம் புதிதாக கண்டுபுடிக்கவேண்டியதில்லை அது பக்கத்து வீட்டாரை சகோதரர்களாக ஏறுக்கொள்வதன்முலம் கிடைக்ககூடியது என்று உருக்கமாக பேசினார்.

போப் லியோவின் இந்த அமெரிக்க பயணம் அந்த பிராந்தியத்தில் கத்தோலிக்க மதத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றது, 2024ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகில் உள்ள கத்தோலிக்கர்களில் 5ல் ஒரு பகுதியினர் ஆப்ரிக்காவில்தான் வசிக்கின்றனர். போப்பின் இந்த துணிச்சலான கருத்துக்கு கேன்டர்பரி பேராயர் சாரா முல்லல்லி உள்ளிட்ட உலக சமய தலைவர்கள் தங்களது ஆதார்வை தெரிவித்துள்ளார்.

Tags : Pope Leo ,Yaoundé ,Catholic Church ,Cameroon ,
× RELATED 7 ஆபத்தான நாட்கள் – தாய்லாந்து...