×

இஸ்ரேல் – லெபனான் 10 நாள் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் தலைமையில் வாஷிங்டனில் இஸ்ரேல் மற்றும் லெபனான் பிரதிநிதிகள் இடையே வரலாற்று சிறப்புமிக்க நேரடிப் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக இஸ்ரேலிய ராணுவத்தின் நடவடிக்கைகளால் ஏற்படும் மனித இழப்புக்களை விளைக்கும் வகையில் இஸ்ரேலிய ராணுவம் அடுத்தடுத்து நடத்திய மூன்று இலக்கு தாக்குதல்களில் லெபனானின் 4மீட்பு பணியாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே நேற்று லெபனான் அதிபர் ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தப்பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவரும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாகவும், இந்த போர் நிறுத்தம் 10 நாள் அமலில் இருக்கும் என்றும் இதுவரை 10 போரை நான் நிறுத்தி விட்டேன் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

Tags : Israel ,Lebanon ,Trump ,New York ,Washington ,United States ,
× RELATED 7 ஆபத்தான நாட்கள் – தாய்லாந்து...