சென்னை: சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ரூ.10,000 QR கோடு டோக்கன் விநியோகம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. QR கோடு டோக்கன் விநியோகம் தொடர்பாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று வழக்கை முடித்து வைத்தனர்.

