×

ஸ்ரீவைகுண்டத்தில் கள்ளபிரான் கோவிலில் சித்திரை தேரோட்டத்தில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கள்ளபிரான் கோவிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கிய நிலையில் தேரைத்தலும் தடி திடீரேன்று உடைந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவதாக கருதப்படும் இக்கோவிலில், சித்திரை திருவிழாவெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

நவதிருப்பதி தலங்களில் முதல் தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. சித்திரைத்திருவிழாவின் ஒருபகுதியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. சித்திரை திருவிழாவில் 9ஆம் நாளான இன்று திருத்தேரோட்டம் தொடங்கிய நிலையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தபோது தேரை தள்ளும் தடி உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைத்தனர் தொடர்ந்து தேரின் தடியை சீரமைக்கும் பணி நடைபெற்றதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேரை இழுக்க முடியாமல் பக்தர்கள் காத்திருந்தனர்.

முன்னதாக கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், நித்தியல், கோஷ்டி, திருமஞ்சனம் நடந்தது குறிப்பிடத்தக்கது .

 

 

Tags : Chitra Terotata ,Kallabran Temple ,Sri Vaikunda ,Thoothukudi ,Srivaikunda, Thoothukudi district ,Srivaikundam Kallabran Temple ,Thamiraparani River ,Dutukudi District ,Nawathripathi ,
× RELATED அவதூறு பேச்சு: அண்ணாமலைக்கு சேலம்...