- ஸ்டட்கார்ட் மகளிர் டென்னிஸ்
- ஈலினா ஸ்விட்டோலினா
- ஸ்டட்கர்ட்
- ஈவா லிஸ்
- ஸ்டுட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி
- ஸ்டட்கார்ட் பெண்கள் டென்னிஸ் போட்டி
- ஸ்டட்கர்ட், ஜெர்மனி
ஸ்டட்கார்ட்: ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் நேற்று, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, ஜெர்மனி வீராங்கனை இவா லிஸை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் ஸ்டட்கார்ட் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா – ஜெர்மனி வீராங்கனை இவா லிஸ் மோதினர். போட்டியின் துவக்கம் முதல் சாதுரியமாக ஆடி புள்ளிகளை குவித்த எலினா, முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அட்டகாசமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய எலினா, அந்த செட்டில் ஒரு புள்ளி கூட விட்டுத்தராமல் 6-0 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். இதன் மூலம், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய எலினா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
