×

யூடியூபர் சங்கர் மீதான குண்டாஸ் ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா என்பவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ‘ரெட் அண்ட் பொல்லொவ்’ என்ற திரைப்படத்தை வெளியிட்டார். அந்த திரைப்படத்தை யூடியூபர் சங்கர் தனது எக்ஸ் தளத்தில் அவதூறாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா, யூடியூபர் சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, ரூ.10 லட்சம் கொடுத்தால், அந்த அவதூறு வீடியோவை நீக்குவதாக மிரட்டி உள்ளார்.
இதுதொடர்பா, யூடியூபர் சங்கரை நேரில் சந்தித்து பேசியபோது, மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்ததால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா, கடந்த ஜூன் 1ம் தேதி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் யூடியூபர் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து, கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால், சென்னை காவல்துறை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். பின்னர், சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீது உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி, நிபந்தனையுடன் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஆனால், இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த யூடியூபர் சங்கர், உயர் நீதிமன்ற விதித்த நிபந்தனைகளை மீறி, சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக பேசியும், சென்னை காவல்துறைக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதால் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் யூடியூபர் சங்கர், தனது தோழி மாலதியுடன் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் பதுங்கி இருந்தபோது, சென்னை போலீசார் அவரை கைது செய்து, சென்னை அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், யூடியூபர் சங்கர், தன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், யூடியூபர் சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அனுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்றும், எனவே குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தை அனுகும்படி கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,Kundas ,YouTuber ,Shankar ,Chennai ,Mahesh Ramya ,
× RELATED தொகுதி மறுவரையறை மசோதாவை...