×

சீனி என எழுதிவிட்டு நக்கினால் இனிக்காது: விஜய்யை விளாசிய நயினார்

நெல்லை சந்திப்பில் அம்பேத்கர் சிலைக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தமிழகத்திற்கு இதுவரை ரூ.14.5 லட்சம் கோடி நிதி கொடுத்திருக்கிறார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அவர் தமிழகத்திற்கு 11 முறை வந்துள்ளார். பிரதமர் மலேசியா சென்றாலும், ஐநா சபை சென்றாலும் தமிழைப் பற்றி பேசுகிறார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தனி இருக்கை அமைக்கவும், திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பிரதமர் மோடி 15ம் தேதி (இன்று) கன்னியாகுமரி வருகிறார். வேப்பமூடு ஜங்ஷன் பகுதியிலிருந்து வடசேரி ஜங்ஷன் வரை ரோடு ஷோவில் அவர் பங்கேற்கிறார். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சீனி என எழுதிவிட்டு எடுத்து நக்கினால் இனிக்காது. விஜய் ஒரு சினிமா நடிகர். அவரால் ஆட்சியை எல்லாம் பிடிக்க முடியாது. சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை வைத்து எதையும் முடிவெடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Nayinar ,Vijay ,BJP ,president ,Nayinar Nagendran ,Ambedkar ,Nellai Junction ,Modi ,Tamil Nadu ,Tamil Nadu… ,
× RELATED புதுவையை போன்ற நிலை பாஜக-வால்...