- பஜகா-வால்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அத்தமுக்
- விடுதலை சிறுத்தை கட்சி
- பாஜக
- ஆதிமுக
- புதுச்சேரி
- இறைவன்
- திமுகா
- கோவிந்தராஜன்
- Kummidipundi
பெரியபாளையம்; புதுச்சேரியில் அதிமுக-வை விட பாஜக வளர்ந்திருப்பதை போன்று தமிழ்நாட்டிலும் தேர்தலுக்கு பின்னர் அதிமுக தேய்ந்து பாஜக வளர கூடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார். கும்மிடிப்பூண்டி பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கோவிந்தராஜனை ஆதரித்து பெரியபாளையம் பஜாரில் திருமாவளவன் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், பாஜக-வினர் முகமூடி அணிந்து கொண்டு வந்து அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க துடிக்கிறார்கள் என்றார்.
ஒருகாலத்தில் புதுவையில் அதிமுக 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இப்போது பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. இதன் மூலம் புதுச்சேரியில் அதிமுக தேய்ந்து, பாஜக வளர்ந்துள்ளது தெளிவாகிறது. தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு அதிமுக தேய்ந்து பாஜக வலிமை பெறப்போகிறது. இது நடக்க கூடாது என்றார்.
தமிழ்நாட்டில் தம்முடைய வலதுசாரி அரசியலை வலுப்பெற செய்வதற்கு சங்பரிவார்கள் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். அவர்கள் அதிமுக-வோடு கை கோர்த்து தமிழகத்திற்குள் வருகிறார்கள், பாமக அன்புமணியோடு கை கோர்த்து வருகிறார்கள். இவர்கள் சராசரி அரசியல்வாதிகள் இல்லை, அம்பேத்கர் உருவாக்கி தந்துள்ள அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவர்கள்.
மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடர்ந்தால் தமிழகம், தமிழர் பண்பாடு பாதுகாப்பாக இருக்கும். திருவள்ளுவர், பெரியார் பாதுகாப்பாக இருப்பர். ஆனால் இங்கு அதிமுக,பாஜக கட்சிகள் வலிமை பெற்றால் பெரியார் அரசியலை அவர்கள் வீழ்த்துவார்கள். தமிழ்நாட்டில் பெரியார் அரசியலை வீழ்த்தினால் அது அம்பேத்கரை வீழ்த்தியதாக பொருள் என்றும் திருமானவளவன் எச்சரித்து உள்ளார். பாஜக-வை தனித்து எதிர்க்கும் வலிமை இல்லாததாலேயே தங்கள் கட்சி திமுக-வுடன் தொடர்ந்து கை கோர்த்துள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் ஒரு காலத்தில் பாஜக ஒன்றுமே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் அதிமுக-வால் இப்போது 11 சதவீதம் வாக்குள்ள கட்சியாக மாறியுள்ளது. பொதுவாக கூட்டணி கட்சிகளுக்கு துரோகம் இழைப்பது என்பது பாஜக-விற்கு கைவந்த கலை. தற்போது தமிழகத்தில் அதிமுக இரண்டாவது இடதில் இருப்பது பாஜக-வின் கண்களை உறுத்துகிறது. எனவே இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுக-வின் எதிர்காலம் கேள்விக்குறியாக போகிறது என்றும் திருமாவளவன் பேசினார்.

