- அர்ஜுன்
- புது தில்லி
- யுஎஸ் ஓபன் பிக்கெட்பால் சாம்பியன்ஷிப்
- நேபிள்ஸ், புளோரிடா, அமெரிக்கா
- அர்ஜூன் சிங்
புதுடெல்லி: யுஎஸ் ஓபன் பிக்கெட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நேபிள்ஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில், ஆடவருக்கான, 5.0 ரேட்டிங் பிரிவு ஒற்றையர் போட்டியில், இந்திய வீரர் அர்ஜுன் சிங், 13-11, 11-6 என்ற நேர் செட்களில் ஆஷ்டோன் பேட்டர்சனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 40 பிளஸ் புரோ ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவை சேர்ந்த திரேன் படேல், 11-9, 3-11, 11-9 என்ற செட் கணக்கில் ஜுவான் அரயாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
லா லிகா கால்பந்து வில்லாரியல் வெற்றி;
பில்பாவ்: ஸ்பெயின் நாட்டின் பில்பாவ் நகரில் லா லிகா கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் வில்லாரியல், அத்லெடிக் கிளப் அணிகள் மோதின. போட்டியின் 26வது நிமிடத்தில் வில்லாரியல் அணியின் செர்கி கார்டோனா முதல் கோல் போட்டு அசத்தினார். அவரைத் தொடர்ந்து அந்த அணியின் அல்பான், 45+5வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டார். அத்லெடிக் அணி சார்பாக, கோர்கோ குருஸேடா, 84வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டும் போட்டார். அதன் பின் கோல்கள் விழாததால், 2-1 என்ற கோல் கணக்கில் வில்லா ரியல் அணி அபார வெற்றி பெற்றது.
