- சிவசைலநாதசுவாமி கோயில்
- பங்குனி மகா உற்சவம்
- Sivasailam
- பரமகல்யான் அம்பாள் உடனுறை சிவசைலநாதசுவாமி
- கோவில்
- ஆழ்வார்குறிச்சி
கடையம், ஏப்.14: சிவசைலத்தில் பிரசித்தி பெற்ற சிவசைலநாதசுவாமி கோயிலில் பங்குனி மகா உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலத்தில் பிரசித்தி பெற்ற பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மகா உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. இந்தாண்டு பங்குனி மகா உற்சவத்தை முன்னிட்டு கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 11ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு சுவாமி-அம்பாள் தனி,தனி தேரில் எழுந்தருளினர். சுவாமி தேரை பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர். சுவாமி தேர் நிலையம் வந்தடைந்ததும் ஓம் சக்தி பராசக்தி என்று பக்தி கோஷம் முழங்க பெண்கள் மட்டும் அம்பாள் தேரை இழுத்தனர். தேரோட்டத்தில் ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், ஆம்பூர், பொட்டல்புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
