×

சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாஜவுடன் எப்படி இணக்கமாக இருக்க முடியும்?

கேடிசி நகர், ஏப். 14: நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் சுப்பிரமணியனை ஆதரித்து கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி., கங்கைகொண்டான் பஜாரில் மக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தத் தொகுதியில் போட்டியிடும் முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள சுப்பிரமணியனுக்கு நீங்கள் மிகப் பெரிய வெற்றியை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தேடித் தரவேண்டும். மகளிர் உரிமைத் தொகை திராவிட மாடல் 2.0 ஆட்சியில் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ரூ.8 ஆயிரத்துக்கான இல்லத்தரசி கூப்பன் மூலம் உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சிக்கு வந்ததும் அது உங்கள் கைக்கு வரும். ஒன்றிய அரசு 100 நாட்கள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒழுங்காக தருவதில்லை.

அத்திட்டத்திற்கான நிதியை முடக்குவதற்கு டெல்லியில் முயற்சிக்கின்றனர். தமிழக மக்களுக்கு எதிரான ஒரு ஆட்சி டெல்லியில் நடக்கிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி கூறுகிறார். தமிழக மக்களின் உரிமைகளை அடகு வைத்து இணக்கமாக இருக்க முடியுமா? சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருக்கும் பாஜவுடன் எப்படி இணக்கமாக இருக்க முடியும்? தமிழ்நாடு மக்கள் ஒற்றுமையாக இருப்பதை சீர்குலைப்பவர்களிடம் எப்படி ஒற்றுமையாக இருக்க முடியும்?

கங்கைகொண்டான் சிப்காட்டில் பல ஆயிரம் கோடி மதிப்பில் தொழிற்சாலைகள் வந்துள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள 4 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்து நமது ஆட்சி வந்தவுடன் நெல்லையில் செம்ெமாழி பூங்கா அமைக்கப்படும். தமிழ்நாட்டை சீர்குலைப்பதற்காக அதிமுக வழியே உள்ளே நுழைய பாஜ முயற்சிக்கிறது. எனவே தமிழக மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்க, தமிழ்மொழியை, மொழி உரிமையை பாதுகாக்க, தமிழ் நிலத்தை பாதுகாக்க மீண்டும் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி., மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், துணை மேயர் கேஆர்.ராஜூ, நெல்லை தொகுதி தேர்தல் பார்வையாளர் பேச்சிபாண்டியன், மாநில நெசவாளரணி செயலாளர் பெருமாள், மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராமேஸ்வரன், மஜக மாநில துணைச் செயலாளர் அலிப்பிலால், மாவட்ட செயலாளர் பாளை பாரூக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : BJP ,KTC Nagar ,DMK ,Deputy General Secretary ,Kanimozhi MP ,Nellai ,Subramanian ,Gangaikondan Bazaar ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...