×

ரூ.6.81 கோடிக்கு மஞ்சள் ஏலம்

கெங்கவல்லி, ஏப்.13: ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில், மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஆத்தூர், அரியலூர், தம்மம்பட்டி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 957 விவசாயிகள் 7,771 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 15 வியாபாரிகள் மஞ்சளை தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர்.

இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.13,089க்கும், அதிகபட்சமாக ரூ.17,399க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.12,069க்கும், அதிகபட்சமாக ரூ.15,212க்கும், பனங்காலி மஞ்சள் குறைந்தபட்சம் ரூ.26,089க்கும், அதிபட்சமாக ரூ.34,909க்கும் விலை போனது. மொத்தமாக ரூ.6 கோடியே 81 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

 

Tags : Kengavalli ,Attur ,Pudupet Agricultural Producers and Sales Cooperative Society ,Ariyalur ,Dhammampatti ,Kallakurichi ,Perambalur ,Cuddalore ,Villupuram ,
× RELATED ேசலம் தெற்கு தொகுதியை திமுகவிடம் ஒப்படைக்கணும்