நீடாமங்கலம், ஏப்.13: நீடாமங்கலம் அதிமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு பதிவு. 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை அமலில் உள்ள நிலையி நீடாமங்கலம் போலீஸ் சரகம் ராஜப்பன் சாவடி அருகே அதிமுக கூட்டணியைச் சேர்ந்த அமுமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு கேட்டு அதிமுக ஒன்றியச் செயலாளர் ஆதி.ஜனகர் பிரச்சாரம் செய்துள்ளார்.
இந்த பிரச்சாரத்திற்கு காவல் நிலையத்தில் மாலை 4 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற நேரத்தில் நடத்தாமல் மாலை 7 மணிக்கு நடத்தி பொது மக்களுக்கு இடையூறு செய்ததாக நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் கலைவாணி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அதிமுக ஒன்றியச் செயலாளர் ஆதி.ஜனகர் (வயது 53) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
