- ஜம்புகேஸ்வரர் சிவன் கோயில்
- கட்டிமேடு ஊராட்சி
- திருத்துறைப்பூண்டி
- நாகலாடி
- திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்
- இந்து சமய அறநிலையத்துறை
திருத்துறைப்பூண்டி, ஏப்.12: கட்டிமேடு ஊராட்சியில் ஆயிரம் ஆண்டுக்கு பழமையான ஜம்புகேஸ்வரர் சிவன் கோயில் ரூ.2.61 கோடியில் புதிதாக கோயில் கட்டும் பணி விறுவிறுப்பு நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு எல்லை நாகலடி இந்து சமய அறநிலையத்துறை சொந்தமான ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மிகவும் சிதலமடைந்திருந்த சிவன் ஆலயம் சித்தி விநாயகர் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த கோவிலுக்கு புதிய கட்டுமான புனரமைப்பு மற்றும் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ரூபாய் 2 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கி இருந்ததனர். புதிய கோயில் கட்ட பூமி பூஜை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தொடர் மழை பின்னர் வடகிழக்கு பருவை மழை அதனை தொடர்து தற்போது கோடை மழை அதில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
