×

குடவாசல் அரசு கலை கல்லூரியில் முப்பெரும் விழா வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

வலங்கைமான்,ஏப்.13: குடவாசல் அரசு எம்ஜிஆர் கலை கல்லூரியில் விளையாட்டு விழா ஆகியவை முப்பெரும் விழா நடைபெற்றது. குடவாசல் அரசு டாக்டர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, நுண்களை மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி முதல்வர் பசுபதி தலைமையில் நடந்தது. ஆங்கிலத்துறை தலைவர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

கணினி அறிவியல் துறை தலைவர் குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு பரதநாட்டியம், பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை நடந்தது. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை பஞ்சாப் நேஷனல் வங்கி முதுநிலை மேலாளர் (ஓய்வு) செல்வராஜன் வழங்கினார். கணிதத்துறை தலைவர் நிகழ்ச்சியை தொகுத்தார். விழா முடிவில் புவனேந்திரன் நன்றி கூறினார்.

 

 

Tags : Government College of Arts of ,Guadwasal ,Valangaiman ,Government MGR Art College of ,Gujarat ,Gwadasal Government Dr. MGR College of Arts and Sciences ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...