×

ஆயக்காரன்புலத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழா

வேதாரண்யம், ஏப்.13:ஆயக்காரன்புலத்தில் நடந்த கலைஅறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 275 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவ ட்டம், வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் சிவகண்ணு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி சேர்மன் தவஜோதி தலைமை வகித்தார். துணைசேர்மன் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் பிரபாகரன் வரவேற்றார்.

பாரதிதாசன் யுனிவர்சிட்டி சின்டிகேட் உறுப்பினர் சக்தி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 275 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்து பேசியதாவது:தற்போது வளர்ந்து வரும் கம்ப்யூட்டர் தொழி ல்நுட்பத்தில் ஏஐ தொழில்நுட்பம் மிக அவசியமானதாகும். கிராமப்புற மாணவர்கள் இந்ததொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வரும் காலங்களில் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை ஏஐ தொழில்நுட்பம் நிர்ணயிக்கும் என்பதில் ஐயமில்லை என பேசினார். கல்லூரி முதல்வர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.

 

Tags : Ayakaranpulam ,Vedaranyam ,Arts and Science College ,Sivakannu Arts and Science College ,Vedaranyam taluka, Nagapattinam district ,Thavajyothi… ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...