×

சீர்காழி தொகுதியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 737 பேரிடம் தபால் ஓட்டுபெறும் பணி

சீர்காழி, ஏப்.13: சீர்காழியில் வாக்குச்சாவடிகளில் நேரடியாக சென்று வாக்களிக்க இயலாத 85 வயது நிறைந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திலேயே சென்று நேரடியாக அஞ்சல் வாக்கும் பெரும் பணி ஆர்டிஓ தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளில் நேரடியாக சென்று வாக்களிக்க இயலாத 85 வயது நிறைந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 737 நபர்களின் இல்லத்திலேயே சென்று நேரடியாக அஞ்சல் வாக்கும் பெரும் பணி நேற்று துவங்கியது.

சீர்காழி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சுரேஷ் தொடங்கி தொடங்கி வைத்தார் சீர்காழி சட்டமன்றத் தொகுதி, அஞ்சல் வாக்கு பெரும் பணிக்காக 15 குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவில் மண்டல அலுவலர் தலைமையில் மைக்ரோ அப்சர்வர், தலைமை ஆசிரியர், காவலர், கேமராமேன், உதவியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

இந்நிகழ்வில் சீர்காழி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜரத்தினம், வட்டாட்சியர்கள் சண்முகம், பிரான்ஸ்வா, சபீதாதேவி, துணை வட்டாட்சியர்கள் பாபு, சரவணன், ரகு,கணேசன் வருவாய் ஆய்வாளர் மாதவன் இளநிலை உதவியாளர் சரத்சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Sirkazhi ,RTO ,Sirkazhi Revenue Divisional Office ,Mayiladuthurai District… ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...