×

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வேட்பாளர்கள் செலவின கணக்குகளை 2 முறை தாக்கல் செய்ய வேண்டும்

கிருஷ்ணராயபுரம், ஏப். 12: கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவின பார்வையாளர் ஹர்ஷ் சிங் தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு செய்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்(தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் தேர்தல் செலவின கண்காணிப்பாளர்கள், வேட்பாளர்கள் செலவிடும் அனைத்து செலவினங்களை கண்காணித்தல் வேண்டும். மேலும் வேட்பாளர்கள் தங்கள் செலவின கணக்குகளை 16.4.2026 மற்றும் 20.4.2026 தேதியில் அவசியம் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது கிருஷ்ணராயபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜாமணி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சித்ரா மற்றும் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Tags : Krishnarayapuram ,Harsh Singh ,Assembly Constituency ,Separate ,Karur ,District ,
× RELATED குளித்தலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு