×

ஆசியா பேட்மின்டன் ஷி யு கி சாம்பியன்: பைனலில் ஆயுஷ் தோல்வி

நிங்போ: பேட்மின்டன் ஆசியா சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, சீன வீரர் ஷி யு கியிடம் தோல்வி அடைந்தார். பேட்மின்டன் ஆசியா சாம்பியன்ஷிப் போட்டிகள், சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, சீனாவை சேர்ந்த நடப்பு உலக சாம்பியன் ஷி யு கியை எதிர்கொண்டார். முதல் செட்டில் அட்டகாசமாக ஆடிய ஷி யு கி, 21-8 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார்.

தொடர்ந்து நடந்த 2வது செட்டின் துவக்கத்தில் ஆயுஷ் ஷெட்டி சிறப்பாக ஆடி புள்ளிகளை சேர்த்தார். இருப்பினும் அதன் பின் சுதாரித்து ஆடிய ஷி யு கி, தொடர்ச்சியாக புள்ளிகளை குவித்தார். அதனால், 21-10 என்ற புள்ளிக் கணக்கில் 2வது செட்டை அவர் கைப்பற்றி, 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பேட்மின்டன் ஆசியா சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 61 ஆண்டுக்கு பின் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை ஆயுஷ் ஷெட்டி பெற்றுள்ளார். இருப்பினும், 61 ஆண்டுகளாக, இப்போட்டியில் இந்தியா வீரர்களால் சாம்பியன் பட்டம் பெற முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Asia Badminton Shi Yu Qi Champion ,Ayush ,Ningbo ,Ayush Shetty ,Shi Yu Qi ,Badminton Asia Championship ,Ningbo, China ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு...