×

மான்டே கார்லோ டென்னிஸ் சின்னர் சாம்பியன் ரூ.12 கோடி பரிசு பெற்றார்

ரோக்புரூன் கேப்மார்டின்: மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நேற்று, இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்காரசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பிரான்சில், மான்டேகார்லோ ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர் மோதினர். முதல் செட்டில் இருவரும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை, 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் சின்னர் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய சின்னர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சாம்பியன் பட்டம் வென்ற சின்னருக்கு ரூ. 12 கோடி பரிசுத் தொகையும், 1000 ஏடிபி புள்ளிகளும் கிடைத்தன. 2ம் இடம் பிடித்த அல்காரசுக்கு ரூ.6.6 கோடி பரிசும், 650 ஏடிபி புள்ளிகளும் கிடைத்தது.

Tags : Monte Carlo ,Sinner ,Roquebrune ,Martin ,Gianni Sinner ,Carlos Alcaraz ,Monte Carlo Masters ,Monte Carlo Men's Tennis Tournament ,France ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு...